வேலையை காட்டத் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று!

Photo of author

By Sakthi

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை. திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதோடு நாளை முதல் 30ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.