ஒட்டுமொத்தமாக திமுகவில் இணைந்த முக்கிய நபர்கள்! படுகுஷியில் திமுகவினர்!

0
83

நடிகர் ரஜினிகாந்த் பல வருடகாலமாக அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தார் அதோடு கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், கூறியிருந்தார். ஆனால் சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரவில்லை என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்தது.

அதன் பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் தன்னுடைய இடங்களை சுட்டிக் காட்டி அவர் அரசியலுக்கு வர மறுத்துவிட்டார். அண்மையில் மறுபடியும் ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அதன்பின்னர் தான் அரசியலுக்கு தான் வரப்போவதில்லை என்று தெரிவித்ததோடு, ரஜினி மக்கள் மன்றத்தை கலைக்க போவதாகவும் அவர் அறிவித்தார் இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைய ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர், மத்திய சென்னை இளைஞரணி செயலாளர், வழக்கறிஞர் அணியின் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் ,மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள், உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.