இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

Photo of author

By Parthipan K

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் பருவமழை ஓய்ந்ததில் இருந்து குறிப்பிட்ட அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மறுநாளில் தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஞாயிற்று கிழமையன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

திங்கட்கிழமையை பொருத்தமட்டில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதில், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.