சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மிஷினில் 2000 ரூபாய் எடுக்க சென்ற அனைவருக்கும் 5000 ரூபாய் வந்துள்ளது.
இது குறித்து தகவல் அளித்த இளைஞரின் செயல் :-
இளைஞர் ஒருவர் ஏடிஎம் சென்று 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்த பொழுது 5000 ரூபாய் வந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்த பொழுதும் 5000 ரூபாய் வந்துள்ளது. எனினும் நேர்மையாக நடந்து கொண்ட அந்த நபர் உடனடியாக ஏடிஎம் இன் ஷட்டரை மூடி விட்டு காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்.
இந்த தவறானது நிகழ்வதற்கு முழு காரணம் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பக்கூடிய பணியாளரே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 200 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 வைத்தால், இயந்திரம் பணத்தை மாற்றிக்கொடுக்க வாய்ப்பு உள்ளது.
பொன்னேரியில் நடந்த விரிவான செய்தி :-
பொன்னேரி முத்துமாரியம்மன் கோவில் அருகே திருவொற்றியூர் சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஏ.டி.எம்.மில் ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க வந்துள்ளது. அவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் ரூ.2 ஆயிரம் எடுக்க ஏடிஎம் கார்டை சொறுகிறார். அப்போதும் 2 ஆயிரத்திற்கு பதில் ரூ.5 ஆயிரம் வந்தது. உடனடியாக அவர் பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பொன்னேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய பகுதியில் ரூ.500-ஐ மாத்தி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்தது. அதேநேரம் குளறுபடியான இந்த ஏ.டி.எம்.மில் இருந்து வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2 லட்சம் வரை எடுத்து சென்றது தெரிய வந்தது இருக்கிறது.