ராஜமவுலி அடுத்த நான்கு வருடத்திற்கு குத்தகை எடுத்த நடிகர்!!

Photo of author

By Vinoth

ராஜமவுலி அடுத்த நான்கு வருடத்திற்கு குத்தகை எடுத்த நடிகர்!!

Vinoth

Rajamouli is an actor on lease for the next four years!!

ராஜமவுலி: இவர் இயக்கிய  RRR படத்திற்கு பின் ராஜமௌலியின் அடுத்த படத்திற்காக திரையுலகம் காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இதற்கான முதல் அப்டேட் வெளிவந்துள்ளது. ராஜமௌலி நான்கு வருடத்திற்கு மகேஷ்பாபுவை குத்தகை எடுத்து லாக் செய்து வைத்துள்ளாராம். அதாவது அடுத்த எடுக்க உள்ள படம் “Jungle action adventure” என்ற படத்தின்  கதைக்களத்தில் உருவாக உள்ளதாம்.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 2025 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2027 முதல் பாகம் முடித்து வெளியிடப்படும். அடுத்த  2029-ல் இரண்டாம் பாகம் வெளியிட உள்ளனர். இதனால் மகேஷ்பாபுவை கிட்டத்தட்ட நாலு முதல் ஐந்து வருடத்திற்கு ராஜமௌலி கைவசத்தில் உள்ளார்.

இந்த ஒரு பிரம்மாண்ட படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார் என்பதற்கான வேலைகள் திவரமாக நடந்து கொண்டு வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பட்ஜெட்டில், முக்கியமா மகேஷ்பாபுவுக்கு தென்னிந்தியாவிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பளத்தை கொடுத்து உருவாக உள்ள இந்த படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடிக்கும் என அவர் தெரிவித்தார்.