தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

0
280

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சில திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த மைல்கல் சாதனையை எட்டிய ஒரே தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன்தான் என்று சொல்லப்படுகிறது. மூன்று வாரங்களைக் கடந்துள்ள பொன்னியின் செல்வன் இன்னமும் பார்வையாளர்களை அரங்கு நோக்கி இழுத்துவருகிறது.

வரும் வாரம் தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் , சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் தீபாவளிக்கு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடினாலும், பொன்னியின் செல்வன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகும் 50 முதல் 100 திரைகளில் இந்த படம் ஓட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி!
Next articleயசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?… இதுதான் காரண்மா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here