“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து

0
205

“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் உருவாக்க ஆசைப்பட்டனர். அது போல தானும் அந்த நாவலை படமாக்க ஆசைப்பட்டதாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். மேலும் தான் அதை திரைப்படமாக இல்லாமல் 15 முதல் 20 எபிசோட்கள் வரை ஓடும் வெப் சீரிஸாக எடுக்க ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நாவல்களுக்கு ஓடிடிகளில் வரும் வெப் சீரிஸ்தான் பொருத்தமானது எனக் கூறியுள்ளார்.

Previous articleநேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா
Next articleசர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!