சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!

0
69

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!

டி 20 போட்டிகளுக்கான சமீபத்தைய தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டார்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இப்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரின் உச்சபட்ச தரவரிசையாகும். சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளைப் பெற்றுள்ளார். கோஹ்லி மற்றும் ராகுலுக்கு அடுத்தபடியாக அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மற்ற இந்திய வீரர்களன இஷான் கிஷான் 14 ஆவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 16 ஆவது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோஹ்லி முறையே 25 மற்றும் 28 ஆவது இடங்களில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக விளையாடாமல் இருக்கும் கோஹ்லியின் மோசமான தரவரிசை இதுவாகும்.