ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! சுகப்பிரசவம் குறித்து மருத்துவர்கள் கூறிய முக்கிய தகவல்!

Photo of author

By Jayachandiran

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! சுகப்பிரசவம் குறித்து மருத்துவர்கள் கூறிய முக்கிய தகவல்!

Jayachandiran

Updated on:

ராஜஸ்தானில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் வசிக்கு ஆயிஷா என்ற இளம்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டோரி என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார். தற்போது முதல் பிரசவத்திற்காக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவென்றால், பிறந்த நான்கு குழந்தைகளுமே சுகபிரசவத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பொதுவாக ஒரே பிரசவத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போது உடல்சத்து குறைபாடு மற்றும் ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கும் என்ற தகவலை தெரிவித்தனர்.

இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை அறிந்த ஆயிஷாவின் உறவினர்கள்; குழந்தைகளின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது சொந்த ஊரில் தடபுடலாக விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.