வாழ்வா.? சாவா.? போட்டியில் கொல்கத்தா அணி.!! டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பௌலிங் தேர்வு.!
இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 54வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் பைல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும். தோல்வியுற்றால் கொல்கத்தா அணி இந்த தொடரில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
கொல்கத்தா அணி;
ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கே ), தினேஷ் கார்த்திக் (w), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
ராஜஸ்தான் அணி;
யஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் (வி.கீ &கே ), க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் தேவாடியா, ஜெய்தேவ் உனட்கட், சேத்தன் சகரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்