தீபாவளியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் 4 டாப் நடிகர்கள்.!!

Photo of author

By Vijay

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது வரை பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.அதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக, தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்துடன், அருண்விஜயின் யானை, சிம்புவின் மாநாடு, ஆர்யா-விஷாலின் எனிமி, சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.