மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி !
ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் அடைந்துள்ளார் என பல தகவல்கள் வெளிவந்தது.
With gods abundant grace and our parents blessings 🙏🏻😇Vishagan,Ved and I are thrilled to welcome Ved’s little brother 💙💙💙 VEER RAJINIKANTH VANANGAMUDI today 11/9/22 #Veer #Blessed 😇🥰thank you to our amazing doctors @sumana_manohar Dr.Srividya Seshadri @SeshadriSuresh3 🙏🏻 pic.twitter.com/a8tXbqmTxf
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 11, 2022
ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை. தற்பொழுது ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தெய்வீக அருளோடும் ,பெற்றோர்களின் ஆசியோடும் விசாகன், வேத் மற்றும் நாங்கள் அனைவரும் சேர்ந்து தனது இரண்டாம் மகனான வீர் ரஜினிகாந்த் வணங்கா முடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என ட்வீட் செய்துள்ளார். இதைப் பார்த்த பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.