தன் மகள் படத்தை  முடித்து கொடுத்த ரஜினி!! படக்குழு அதிரடி அறிவிப்பு!! 

Photo of author

By Jeevitha

தன் மகள் படத்தை  முடித்து கொடுத்த ரஜினி!! படக்குழு அதிரடி அறிவிப்பு!!

ரஜினி காந்த் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனர் பாலச்சந்திர் இயக்கிய அபூர்வ ராங்ககள் படத்தில் கமல் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் உடன் இணைத்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து முத்து, அண்ணாமலை, பாட்ஷா , சந்திரமுகி , படையப்பா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஜெயிலர் நடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

அதனை தொடர்ந்து அவர் மகள் இயக்கும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். லால் சாலம் படம்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். மேலும் விக்ராந்த் , விஷ்ணு விஷால் போன்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தாயரிப்பில் தயாரிக்கப்பட்டது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முதலில்  மும்பையில் நடைபெற்றது. அதனையடுத்து திருவண்ணாமாலையில் நடந்து முடிவடைத்தது. அதனை தொடர்ந்து  கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடைபெற்று வந்தது.

இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது வந்த தகவல் படி ரஜினி காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.