ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஏமாற்றம் மிஞ்சியதாக பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று கட்சி ஆரம்ப நிலை குறித்தும் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்ன என்பதை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு முன்பு நடிகர் ரஜினிகாழ்ந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஒரு வருடம் கழித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனைக்கு பிறகு ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றம் கிடைத்தது. இந்த ஏமாற்றத்தை பற்றி பிறகு தெரிவிக்கிறேன். சிஏஏ போராட்டம் குறித்து இஸ்லாமியர் அமைப்புடன் முன்பு விவாதம் நடத்தினேன் என்று கூறினார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக உறுப்பினர்களை இணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சிலர் மட்டுமே நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளனர். பலர் அதிக உறுப்பினர்களை சேர்க்கவில்லை. இதனால் ரஜினிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது கட்சியில் இருக்கும் பலர் முக்கிய பதவிகளை அடைய நினைப்பதற்காக ரஜினியிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதாகவும், கட்சி ஆரம்பித்தவுடன் எம்எல்ஏ ஆக வேண்டும் என்கிற பதவி ஆசையில் இருப்பதாக கூறப்படுகிறது.