ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா?

0
170

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தின் அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டர் ஒன்றையும்  வெளியிட்டது. அந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது.

இந்நிலையில் சென்னையில் படத்தின் படப்பிடிப்பு பிரபலமான ஒரு பகுதியில் நடந்து வருகிறதாம். ஒரு காலத்தில் சென்னையில் சினிமாக்காரர்களுக்கு பிடித்தமான இடமாக இருந்த உட்லேண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் தற்போது ஒரு காவல்நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். அங்கு ரஜினி மற்றும் யோகி பாபு சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் நெல்சன் படமாக்கி வருகிறாராம்.

இதற்கிடையில் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகி இருந்த மனோஜ் பரமஹம்சா கடைசி நேரத்தில் விலக, இப்போது விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Previous articleஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!
Next articleஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!