ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

Photo of author

By Savitha

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

Savitha

Updated on:

Rajinikanth praise Harish Kalyan-News4 Tamil Latest Cinema News in Tamil

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி போன்றோர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகி பாபு, முனீஷ்காந்த், டேனி உள்ளிட்ட  பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே படக்குழுவினர் அனைவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது  நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த படத்தின் டீஸர் காண்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அந்த டீஸர் பிடித்திருப்பதாகவும் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நன்றாக நடித்திருப்பதாகவும் இந்த டீஸர் மிகவும் கமர்ஷியலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.