சிவகார்த்திகேயனுக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த நெல்சன்… வேண்டாம் என மறுத்த சூப்பர் ஸ்டார்!

0
190

சிவகார்த்திகேயனுக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த நெல்சன்… வேண்டாம் என மறுத்த சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு அனிருத் இசையமக்கிறார். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்த நெல்சன் அதை ரஜினியிடம் கூறி அனுமதி கேட்டுள்ளாராம். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு வேண்டாம் என சொல்லி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயிலர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

Previous articleதஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!
Next articleகூகுள் பே மூலம் பணம்! டோர் டெலிவரியில் கஞ்சா! கையும் களவுமாக சிக்கிய விநியோகிப்பாளர்கள்