நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததாகவும் அதில் வாராக் கடனாக 1.7 கோடி ரூபாய் ஏற்பட்டதால் தனக்கு நஷ்டம் ஆகி விட்டதாகவும் கணக்கு காட்டியதாக தெரிகிறது
ஆனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் குறித்த தகவலை வருமான வரித்துறை ஏற்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு ரஜினிக்கு சாதகமாக முடிந்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்தது என்பதும் இந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது