இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

0
81

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. கைதிகளின் குடும்பத்தினர் வந்து அவர்களைப் பார்த்து சென்றுள்ளனர். மேலும் கைதிகளின் கடைசி ஆசை என்ன என்பது குறித்தும் சிறைத்துறை கேட்டுள்ளது.

தன்டனை நிறைவேற்றத்துக்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் திஹார் சிறையில் ஹேங்க்மேன் இல்லை என்பதால்  உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத் என்ற ஹேங்க்மேன் இன்று வர இருக்கிறார். அவருக்கு 15 ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

மீரட்டில் இருந்து அவர் திஹார் சிறைக்கு வரும் வழியை போலிஸார் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அவருக்கு 1.25 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்பட உள்ளது. இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் என்றைக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்படும் என்பதை சிறை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

author avatar
Parthipan K