ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?… தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லிக்கு சென்று திரும்பிய சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் ஜெயிலர் திரைப்படம் சம்மந்தமாக சில கேள்விகளை எழுப்பினர். அப்போது ’ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் எப்போது என தெளிவாக தெரியவில்லை. ஆனால் விரைவில் தொடங்கிவிடும்” எனக் கூறினார்.
இடையில் பத்திரிக்கை “ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினிகாந்த் தன் ஸ்டைலில் “ஷூட்டிங்தான்” எனக் கூறினார். அதனால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.