கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து சினிமா பிரபலங்கள் சிலர் இது அவசியமான ஒன்று மக்கள் இதனை உதாசீனப்படுத்த வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் அவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை உறுதி செய்து ட்விட்டர் நிறுவனம் அந்த வீடியோவை ரஜினியின் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.