17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது?

0
203
#image_title

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது?

1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘ராமன் ஸ்ரீ ராமன்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1986 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ‘மாவீரன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘தர்ம தேவதை’ மற்றும் ‘தழுவாத கைகள்’ என்ற படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘மாவீரன்’ எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் விஜயகாந்த்தின் தர்ம தேவதை 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த்தின் ‘தழுவாத கைகள்’ எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஜினியின் ‘வேலைக்காரன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘வேலுண்டு வினையில்லை’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் வேலைக்காரன் படம் 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த்தின் ‘வேலுண்டு வினையில்லை’ எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

1987 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ‘மனிதன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ மற்றும் ‘உழவன் மகன்’ என்ற படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘மனிதன்’ 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த்தின் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ மற்றும் ‘உழவன் மகன்’ என்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது.

1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘செந்தூரப்பூவே’ என்ற இரு படங்களும் வெளியானது. இதில் விஜயகாந்தின் ‘செந்தூரப்பூவே’ 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1988 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று ரஜினியின் ‘குரு சிஷ்யன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘குரு சிஷ்யன்’ 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1988 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ‘கொடி பறக்குது’ மற்றும் விஜயகாந்த்தின் ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற இரு படங்கள் வெளியானது. இந்த இரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

1989 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் ‘மாப்பிளை’ மற்றும் விஜயகாந்த்தின் ‘தர்மம் வெல்லும்’ மற்றும் ‘ராஜநடை என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘மாப்பிளை’ 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1990 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் ‘பணக்காரன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘பணக்காரன்’ 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் ‘தளபதி’ மற்றும் விஜயகாந்த்தின் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘தளபதி’ 150 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் ‘மன்னன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘சின்ன கவுண்டர்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘மன்னன்’ 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் விஜயகாந்த்தின் ‘சின்ன கவுண்டர்’ 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் ‘பாண்டியன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘காவியத்தலைவன்’ என்ற இரு படங்கள் வெளியானது. இந்த இரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினியின் ‘எஜமான்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘ஏழை ஜாதி’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘எஜமான்’ 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினியின் ‘உழைப்பாளி’ மற்றும் விஜயகாந்த்தின் ‘சக்கரை தேவன்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ”உழைப்பாளி’ 150 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

1994 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ரஜினியின் ‘வீரா’ மற்றும் விஜயகாந்த்தின் ‘ஆனஸ்ட்ராஜ்’ என்ற இரு படங்கள் வெளியானது. இரு படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது.

1995 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரஜினியின் ‘பாட்ஷா’ மற்றும் விஜயகாந்த்தின் ‘கருப்பு நிலா’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘பாட்ஷா’ 365 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த்தின் ‘கருப்பு நிலா’ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

1999 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ரஜினியின் ‘படையப்பா’ மற்றும் விஜயகாந்த்தின் ‘பெரியண்ணா’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘படையப்பா’ அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.