விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் ரஜினி.!! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

Photo of author

By Vijay

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.

இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்,

நேற்று, காவேரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்து அவரது மனைவி திருமதி.லதா ரஜினிகாந்த் கூறியதாவது, ரஜினி அவர்களுக்கு வழக்கமாக செய்யப்படும் உடல் பரிசோதனைக்காக தான் சென்று உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.