ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!!
தற்பொழுது வெளியாகும் தமிழ் படங்களில் ரீமேக் பாடல்கள் மற்றும் பழைய பாடல்களின் பிஜிஎம் தான் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகிறது.புதிய பாடல்களை விட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது.இதனால் இயக்குநர்கள் தங்களின் படங்களில் பழைய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பாடல்களை ரீமேக் செய்து படங்களில் பயன்படுத்தி வந்த இயக்குநர்கள் தற்பொழுது அதை சண்டை காட்சிகளுக்கு பிஜிஎம்களாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.தமிழ் திரையுலகில் பிஸியான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் வரை அனைவருக்கும் இந்த யுக்தி கை கொடுத்து வருகிறது.
கைதி படத்தில் ‘ஆசை அதிகம் வச்சி’,விக்ரம் படத்தில் ‘விக்ரம் விக்ரம்’,மார்க் ஆண்டனி படத்தில் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’,லியோவில் ‘தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்’ மற்றும் கரு கரு கருப்பாயி’ என்று வரிசை நீள்கிறது.
இதில் தற்பொழுது ரஜினி நடிக்க உள்ள ‘கூலி’ படமும் இணைந்து விட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படத்தின் டீசர் நேற்று(ஏப்ரல் 22) வெளியானது.மொத்தம் 3:16 நிமிட டீசர் காட்சியின் இறுதியில் “செண்பகமே செண்பகமே” என்ற பாடலை விசில் மூலம் பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்து இருப்பார் ரஜினி.
கூலி டீசரில் இடம் பெற்றிருந்த இந்த “செண்பகமே செண்பகமே” பாடல் தற்பொழுது வைரலாகி வருகிறது.1987 ஆம் ஆண்டு வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.இந்த பாடலை கேட்டால் முதலில் நினைவிற்கு வருவது ராமராஜனும்,கன்று குட்டியும் தான்.
அனைவரது மனதிலும் நீங்க இடம் பிடித்திருக்கும் “செண்பகமே செண்பகமே” பாடல் உருவான விதம் தெரியுமா?
கங்கை அமரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் “செண்பகமே செண்பகமே” பாடல் மூன்று விதமாக வரும்.இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை மனோ ஒரு விதத்தில் பாடி இருப்பார்.இன்னொரு விதத்தில் மனோ மற்றும் சுனந்தா இணைந்து பாடி இருப்பர்.”செண்பகமே செண்பகமே” சோக பாடலை ஆஷா போஸ்லே பாடி இருப்பார்.சோக வெர்சனில் ஆஷா போஸ்லே தான் பாட வேண்டும் என்பதில் கங்கை அமரன் உறுதியாக இருந்தார்.
இந்த பாடலை பாடி முடித்ததும் ஆஷா போஸ்லே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.காரணம் அவருக்கு தமிழ் தெரியாது.மொழி பிரச்சனை இருந்ததால் இந்த பாடலை பாட மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்.
செண்பகமே செண்பகமே என்று தொடங்கும் பாடலை முதலில் ‘செம்புகமே செம்புகமே’ என்று பாடி இருக்கிறார்.இதனால் அவருக்கு அந்த வார்த்தையை சொல்லி கொடுக்க இளையராஜா சிரமப்பட்டு இருக்கிறார்.பின்னர் இளையராஜாவின் உதவியாளர் கல்யாண் என்பவர் ஹிந்தியில் இதை பற்றி ஆஷா போஸ்லேவுக்கு விளக்கினார்.அதன் பின்னரே செண்பகமே செண்பகமே என்று பாடிமுடித்தார்.ரெக்கார்டிங் முடிந்த பின்னர் இளையராஜாவிடம் பாடலை போட்டு காட்டும் படி கேட்டு இருக்கிறார்.தான் பாடியதை கேட்ட ஆஷா போஸ்லே கண்களில் இருந்து கண்ணீர் ததும்புகிறது.தெரியாத ஒரு மொழியில் பாடிய பாடல் இவ்வளவு உணர்வுபூர்வமாக வந்திருக்கிறது என்று ஆஷா போஸ்லே மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.