கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

Vinoth

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

நடிகர் விஜய் சேதுபதி கார்த்தியின் 25 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன், கௌரவ வேடம் என கலந்துகட்டி கலக்கி வருகிறார். ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றன. தமிழில் ரஜினி, விஜய் மற்றும் கமல் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பெண்ணா திரைப்படத்திலும் வில்லனாக கலக்கினார்.

இதையடுத்து கார்த்தியின் 25 ஆவது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்த படத்தை குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார். இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது.  இதற்கிடையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கானுக்கு எதிராக. அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.