உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடுவண் அரசால் ராமர் கோயில் கட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுகோயில் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகி சம்பத் ராய் ” ராமர் கோயில் கற்களால் மட்டுமே கட்டப்படுகிறது.
மணல், இரும்பு, சிமெண்ட் போன்றவை பயன்படுத்தப்போவதில்லை. கற்களால் மட்டுமே கட்டுவதன் மூலம் 1000 வருடங்களுக்கு மேல் காற்று, நீர், வெப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்கும்” என்றார்.