அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

0
160

அயோத்தியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பூமி பூஜை நிகழ்வு முடிந்த பின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மகாபீர் என்னும் அந்த நபரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பிரசாதத்துடன் ‘ராம் சரித மானஸ்’ என்னும் ராமர் வரலாறு நூலும், துளசி மாலையும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பின்னர்தான் மற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மகாபீர் என்பதற்குத்தான் முன்னதாக ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் அவரது வீட்டில் உணவு உண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
Next article9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!