இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! 

Photo of author

By Parthipan K

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! 

Parthipan K

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி!

மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதை தயாராகி வருகிறது. ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது கைகூடாமல் போனது. இதையடுத்து, ஆலியர்பட் தேர்வானார். ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷிடம் நீண்ட காலமாக தற்போது வரை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் கதாபாத்திர லுக் டெஸ்ட் மேற்கொண்ட நிலையில் எல்லாம் ஓ.கே-வாகி இந்தாண்டு டிசம்பரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆலியாபட் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளாராம். அதனால் வேறு ஹீரோயினை படக்குழு தேடிவருகிறது. அதேபோல் யாஷும் படக்குழுவுக்கு பிடி கொடுக்க வில்லையாம். அவரும் விலகுவதாக இருக்கிறாராம்.

ராமாயண கதையை படமாக எடுப்பதில் கூட நிறைய பிரச்சனைகள் உள்ளன. கடந்த சில மாதங்கள் முன்பு தெலுங்கு சினிமாவில் ராமாயணக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டது, ஆதிபுருஷ் என்ற பெயரில். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமராக நடித்திருந்தார். அயோத்தி இளவரசன் ராகவன் (பிரபாஸ்) 14 ஆண்டு வனவாசம் செல்வதாக படத்தின் திரைக்கதை அமைப்பட்டது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. படமும் தோல்வியை சந்தித்தது.