இணையத்தில் தீவிரமாக பரவி வரும் பிரபல நடிகையின் படங்கள்!!

பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் தற்போது சமூக வலைய தளங்களில் தீவிரவாக பரவி வருகிறது.

வெள்ளித்திரையில் படையப்பா,பாகுபலி போன்ற படங்களில் பட்டையக் கிளப்பிய ரம்யா கிருஷ்ணன் இடையிடையே டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.

2 வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் அருகே இவரது கார் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த போது தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கண்டு அதிர்ச்சியாகினர். அதில் 96 பீர் பாட்டில்களும், 3 பிளாக் லேபிள், 3 பிளாக் லேபிள் ரெட் மது பாட்டில்களும் இருந்துள்ளன. இதையடுத்து அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த நடிகையின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமினில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானதை தொடர்ந்து தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைய காப்பு நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் தன்னுடைய அம்மா மற்றும் பெரியம்மா வளையல் மாட்டிவிடும் படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் தற்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதையும் கூறி நினைவு கூர்ந்துள்ளார்.

Leave a Comment