கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Photo of author

By Parthipan K

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பூங்கொடி. இவர் அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்ற வாலிபரை காதலித்து வந்தார்.

இவர்கள் காதல் விவகாரத்தில் இரு தரப்பிலும் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். பின்னர் அஜித் தனது பெற்றோரை மட்டும் சமாதானம் செய்து பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு பூங்கொடியின் பெற்றோர்களை அழைத்து அஜித்தின் உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை 10 மாதங்களுக்கு மேலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது‌.

திருமணம் ஆனதில் இருந்தே அஜீத் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே பூங்கொடி கர்ப்பமான போதும் அஜீத் வழக்கம் போலவே ஊர் சுற்றுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சாராயம் கிடைக்காமல் தவித்து வந்த அஜீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க தொடங்கினார்.

இது பற்றி தெரிந்து கொண்ட பூங்கொடி தனது கணவனுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதை சட்டை செய்யாமல் கர்ப்பிணி மனைவியை திட்டிவிட்டு வழக்கம் போல் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார் போதை ஆசாமி.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான பூங்கொடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் அஜீத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் தங்களது மகளின் மரணத்தில் மர்மம் என்றும் அஜீத்தின் குடும்பத்தார் தான் வரதட்சணை கேட்டு கொன்று விட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். போதை ஆசாமி அஜீத் மற்றும் அவரது பெற்றோரை தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை