கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Rank List Released for Veterinary Courses! Announcement issued by the university!

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தொடங்கியது.மேலும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ –மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பத்திற்கான கடைசி சேதி அக்டோபர் மூன்றாம் தேதி மாலை ஐந்து மணி வரை மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர்.மேலும் விண்ணப்பித்தவர்கள்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் அதனை செய்து கொள்ளவும் ,சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.இந்த நிலையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை பத்து மணிக்கு வெளியிடப்படும் என்று கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதே போல் காலை பத்து மணிக்கு கால்நடை மருத்துவர் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.மேலும் தரவரிசை பட்டியல் பல்கலைகழக இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் மேலும் விவரங்களுக்கு https://adm.tanuvas.ac.in இணைய தளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.