இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இன்று பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த தர வரிசை பட்டியலானது, செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில்,சான்றிதழ் பதிவு பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்காக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனாவால் மாணவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் கால அவகாசம் கேட்டதனை தொடர்ந்து, வெளியிடப்பட்டிருந்த தரவரிசை பட்டியலானது தாமதமாக இன்று  வெளியிடப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் 458 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்,அதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை சான்றிதழ்களை பதிவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தனைத் தொடர்ந்து, இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment