ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!!

Photo of author

By CineDesk

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!!

கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல ரவுடி சுனில் மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய எதிரிகளால் கடுமையான முறையில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில் தில்லு தாஜ்பூரியாவை தூக்கி வந்து தரையில் போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்வதையும், அங்குள்ள காவலர்களை சென்றுவிடும் படி கூறுவதையும் பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தை செய்தது தில்லு தாஜ்பூரியாவின் எதிரியான ரவுடி ஜிதேந்தர் கோகியின் கூட்டத்தை சேர்ந்த ஆட்கள் என தெரிகிறது.

தாஜ்பூரியா தரைதளத்தில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய எதிரி ரவுடி ஜிதேந்தர் கோகியின் ஆட்களான யோகேஷ், தீபக், ராஜேஷ் ரியாஸ்கான் ஆகியோர் முதல் தளத்தில் இருந்ததாவும் தெரிகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய அறையின் சிறை கம்பிகளை உடைத்து விட்டு, தரை தளத்திற்கு வந்து தாஜ்பூரியா அறையின் சிறை கம்பிகளையும் உடைத்து , அவரை இரும்பு கம்பியால் அடித்துள்ளனர்.

பின்னர் அவரை தூக்கி வந்து தரையில் போட்டு அடித்து கொலை செய்த காட்சிகள்தான் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. மேலும் இவர்கள் தாக்கும்போது அங்கிருந்த காவலர்கள் ஒருவர் கூட தாஜ் பூரியாவை காப்பாற்றவில்லை என கூறப்படுகிறது. அங்கிருந்த காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

தாஜ்பூரியா இதற்கு முன்னால் மண்டோலி சிறையில் இருந்ததாகவும், இரு வாரங்களுக்கு முன்பாகதான் திகார் சிறைக்கு வந்ததாகவும் தெரிகிறது.இதனை தொடர்ந்து திகார் சிறை நிர்வாகம் ஒரு உதவி கண்காணிப்பாளர் உட்பட 9 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.