பிப்ரவரி 24ஆம் தேதி சீர்காழி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலக்கூடிய 3 வயது மாணவி உறவுக்கார சிறுவனான 16 வயது மதிக்கத்தக்க சிறுவனால் தவறாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறுமி மீது தான் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற நிகழ்வு நிகழும் பொழுது அதில் தவறு யார் பக்கம் உள்ளது என இருபுறமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் இதில் சிறுவன் மீது அனைவரும் தவறு கூறக்கூடிய நிலையில் அந்த சிறுமி மீது தான் தவறு உள்ளது என்றும் அந்த சிறுமி சிறுவனின் உடைய முகத்தில் துப்பியரே இதற்கு காரணம் பெற்றோர்கள் இதுபோன்ற விஷயங்களை தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வழக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.
இந்த நிகழ்வு குறித்து தன்னுடைய X தள பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் கனிமொழி அவர்கள் இவர்களெல்லாம் படித்து பட்டம் பெற்றவர்கள் என்று வெளியில் சொல்லிக் கொள்வது வெட்கக்கேடான ஒன்று என தெரிவித்திருக்கிறார். அதாவது இவர்கள் எல்லாம் படித்தவர்களே இல்லை என்றும் மனிதர்களாக கூட இவர்கள் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை திமுக அமைச்சர் கனிமொழி அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த சிறுவன் சிறுமியினுடைய முகம் கண்கள் போன்றவற்றை கல்லால் சிதைத்திருக்கிறார். வலி தாங்காமல் குழந்தை அலறவே அந்த சிறுவனை போலீசார் படித்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி அதன் பின்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படைத்திருக்கின்றனர். மேலும் இந்த சிறுவனுக்கு சாதகமாக பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு ஈரோடு மாவட்ட ஆணையரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.