வேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
சில வாரங்களாகவே தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இரும்பல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இது தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்பொழுது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐசிஎம் ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவில் வேகமாக பரவி வருவது இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் என தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு இரும்பல், தொண்டை வலி, உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டால், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏழு நாட்கள் வரை நீடிக்கிறது. 5௦ வயது மேற்பட்டோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் வர முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இந்த காய்ச்சல் போல் அல்லாமல் இந்த வைரஸின் பாதிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.
அதனால் வைரஸ் காய்ச்சல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் காய்ச்சல் சளி ஏற்பட்டால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திரவ உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.