சிறந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!! பரிசுத்தொகையுடன் சான்றிதழ்கள் காத்திருப்பு!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு சென்னையில் கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை இரண்டு பிரிவில் நடத்தி வருகிறது. மரபு வழி மற்றும் நவீன வழி மூலம் நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கலை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. எனவே சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய கலை படைப்புகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய கலை படைப்புகளுக்கு 2024-2025 ஆம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய- சிற்பக் கலைக்காட்சி நடத்தி. ஓவியக்கலை பிரிவில் (மரபு வழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/- வீதமும், 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், சிற்பக்கலை பிரிவில் (மரபுவழி / நவீனபாணி) சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதிற்கு மேற்பட்ட 15 மூத்தக் கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/-வீதமும், 35 வயதிற்குட்பட்ட 10 இளங்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-வீதமும் என 50 கலைஞர்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்பொழுது இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை விண்ணப்பங்கள் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனுப்பலாம்.

முதலில் விண்ணப்பங்களை கலை பண்பாட்டு துறையின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதன் பின் ஓவிய, சிற்பக் கலைக்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி. கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், படைப்பின் தலைப்பு. படைப்பின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்) ஓவியங்கள்/ சிற்பங்களின் (10 x 12 Size) இரண்டு புகைப்படங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய குறிப்பு :-

✓ கலைஞர்கள் மரபுவழிப் பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

✓ கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.

✓ தமிழ்நாட்டினை சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் மட்டும் இதில் பங்குபெறுதல் வேண்டும். ஆதார் அடையாள அட்டை நகல் இணைத்தல் வேண்டும்.

மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன் ஓவியங்களின் / சிற்பங்களின் புகைப்படங்களை பின்வரும் முகவரிக்கு 30.11.2024- க்குள் அனுப்பி இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.