இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!
ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. தற்போது வரை 190 க்கும் மேலான மக்கள் உக்ரைனில் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம் இறுதியிலேயே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வியாழன் அன்று முதல் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதில் குறிப்பாக ரஷ்யாவின் தலை நகரையே முதலில் தாக்கியது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நமது இந்தியாவில் மருத்துவம் படிக்க இயலாத மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற மாணவர்கள் தற்போது இந்த இரு நாடுகளின் இடையே ஏற்படும் போரில் சிக்கி தவித்து வருகின்றனர். சரியான உணவு இன்றியும் தங்க இடமின்றியும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போரில் தங்களது பிள்ளைகள் சிக்கி தவிக்கின்றனர், அவர்களை மீட்குமாறு பெற்றோர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழக அரசும் அங்குள்ள மாணவர்களுக்கு உணவு கிடைக்கவும் பாதுகாப்பான சூழலில் இருக்கவும் தக்க உதவிகளை செய்து வருகிறது. அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திலிருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்களை வீடியோ கால் மூலம் விசாரித்து வருகிறார். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருக்கும் ஹேமலதா தனது பிள்ளையை மீட்டுத் தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காமாட்சியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் தான் ஹேமலதா மற்றும் விஜயகுமார் தம்பதியினர். இவர்களுக்கு ஜீவழகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் மருத்துவ படிப்பிற்காக தற்பொழுது உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். தற்பொழுது அங்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் கிடையே போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக தன்னை பாதுகாத்துக்கொள்ள ராசிபுரத்தில் சேர்ந்த மாணவர் ஜீவகன் மற்றும் அவரது நண்பர்கள் 400க்கும் மேற்பட்டோர் ஒரு விடுதியில் பாதாள அறையில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பாதாள அறையில் சிக்கியுள்ளதாக தனது தாயிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கு போர் தொடர்ந்து நடந்து வருவதால் கடைகள் உணவு விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் நாங்கள் உணவின்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதைக்கேட்ட அவரது தாய் ஹேமலதா செய்வதறியாது பதைபதைத்து உள்ளார். பின்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பிற்காக சென்ற தனது மகன் ஜிவலக மற்றும் அவரது நண்பர்கள் மேலும் தங்கள் ராசிபுரத்தில் சேர்ந்த இரு மாணவிகள் ஆகியோர் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அன்றாட வேலைக்கு உணவின்றி சிரமப்படுகின்றனர். இவர்களில் பத்திரமாக மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் மீட்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.