எலி கடித்து விட்டதா? அதன் விஷம் குறைய இதை செய்யுங்க
உங்களை எலி கடித்துவிட்டால் உடலில் இருக்கும் விஷம் குறைவதற்கு இரண்டு மருத்துவ முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எலி கடி விஷம் குறைவதற்கு மருத்துவமுறை 1…
எலி கடி விஷம் குறைவதற்கு ஆதளை வேலை நாம் பயன்படுத்தலாம். ஆதளை செடியின் வேர் எலி கடையின் விஷத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதனுடன் ஒரு சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தும் பொழுது எலிக்கடி விஷம் இறங்கும்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* ஆதளை வேர்
* பசும்பால்
தயார் செய்யும் முறை…
ஆதளை செடியின் வேரை முதலில் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை பசும்பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் காய்ச்சிய பசும்பாலில் அரைத்த இந்த விழுதை கரைத்து 24 நாட்கள் குடித்து வர வேண்டும்.
எலி கடி விஷம் நீங்க இரண்டாவது மருத்துவ முறை…
எலி கடித்த விஷம் உடலில் இருந்து இறங்குவதற்கு கோரைக் கிழங்கு பொடியை சாப்பிடலாம். அதற்கும் இதனுடன் ஒரு சில பொருட்கள் கலக்க வேண்டும்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* கோரைக் கிழங்கு பொடி
* இந்துப்பு
* தேன்
தயார் செய்யும் முறை…
இதை தயார் செய்யும் முறை மிகவும் எளிமையான ஒன்று. ஆம் கோரைக் கிழங்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த காரைக் கிழங்கு பொடியுடன் இந்துப்பு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை தேனில் குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளை 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலி கடி விஷம் உடலில் இருந்து இறங்கும்.