இந்தியா – சீனா போரினால் பறிபோன ரத்தன் டாடாவின் வாழ்க்கை!! ரத்தன் டாட்டாவின் காதலி வெளிப்படை!!

Photo of author

By Gayathri

இந்தியாவின் வெற்றிபெருமான தொழிலதிபராக திகழ்ந்தவர் ரத்தன் டாட்டா. இவர் தொழில் துறை சார்ந்த வரையில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் எனினும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட பல்வேறு நேர்காணல்களில் நீங்கள் ஏனெனினும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விதான் அதிகம் கேட்கப்பட்டது.

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டு திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட ஒரு போர் ரத்தன் டாடாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

ரத்தன் டாடாவின் ஏ லைஃப் என்ற புத்தகத்தில் அவருடைய காதல் கதை குறித்து அவர் எழுதி வைத்திருக்கிறார். அதில், 1960களில் ரத்தன் டாடா அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக சென்றிருந்தார். அப்போது உலக புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் Frederick Earl Emmons அவர்களின் அறிமுகம் ரத்தன் டாடாவுக்கு கிடைத்தது.

மேலும் அங்கு அவருடைய மகளான கரோலின் எம்மானுக்கும் ரத்தம் டாடா விற்கும் இடையே நட்பு உண்டாகி இருக்கிறது. பின்னாளில் அதுவே இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் காதலுக்கு இருவரின் வீட்டிலும் ஒத்துக் கொண்ட நிலையில், ரத்தன் டாடா அவர்கள் தன்னுடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் உடனடியாக அமெரிக்காவில் இருந்து இந்தியா வரவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதனால் அவரும் இந்தியா வந்து விடுகிறார்.

இவ்வாறு இவர் கிளம்பி வரும் காலம் 1962 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அப்பொழுது தான் இந்தியா சீனா இடையே போர் துவங்கியது. இவர் ஜூலை மாதம் இந்தியா வருகிறார் இந்த போர் அக்டோபர் மாதம் துவங்குகிறது. இந்த போர் தான் ரத்தம் டாடாவின் வாழ்க்கையில் நாசமாக்கியது என்றும் கூறலாம்.

ரத்தம் டாடா இந்தியா வந்தவுடன் கரோலினும் இந்தியாவிற்கு வருகை தந்து இருவரும் இணைந்து திருமணம் செய்து கொள்வது தான் இவர்களது முடிவாக இருந்தது. போரின் காரணமாக கரோலினின் அப்பா இவரை இந்தியா செல்ல மறுத்துவிட்டார்.

சிறிது காலங்களுக்கு பிறகு கரோலின் ஓவன் ஜோனஸ் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதற்காக அவர் கூறும் காரணம், ஓவன் ஜோனஸ் ரத்தம் டாடாவை போலவே இருந்ததால் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

இவர்களுடைய திருமணம் முடிந்த சில காலங்கள் ஓடிய பின்பு மீண்டும் இவர் ரத்தன் டாட்டாவை சந்திக்கிறார். நட்பில் இருந்து காதலாக மலர்ந்தது மீண்டும் நட்பாகவே மாறி இருவரும் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.