பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவலை கூறிய ராதிகா!!

Photo of author

By Jayachithra

பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவலை கூறிய ராதிகா!!

Jayachithra

Updated on:

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பவர் தான் ராதிகா என்கிற ஜெனிஃபர். இவர் சீரியலில் இருந்து தான் ஏன் விலகினேன்? என ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஜெனிஃபர் ஈரநிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் நடித்தவர். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களிலும் ஜெனிஃபர் நடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி தொடரில் சவாலான கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இதனைக் குறித்து அவர் கணவர் கூறுகையில், ஜெனிஃபர் இந்த தொடரை விட்டு விலக இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று கூறினார். அதில் ஒன்று தனிப்பட்ட காரணம் என்றும், அதனை மற்றொரு வீடியோவில் சீக்கிரம் கூறுவோம் என்றும் கூறியுள்ளார். மற்றொரு காரணம், இந்த தொடரில் ஜெனிஃபர் இதுவரை நடித்து வந்த பாசிட்டிவான கதாபாத்திரம் மாறப்போகின்றது.

இதன் காரணமாக நல்ல பெயரை வாங்கி விட்டு இப்படி செய்ய உடன்பாடு இல்லை. இதனால் தான் விலகி விட்டார் என்று கூறியுள்ளார். பாக்கியலட்சுமி தோழியாக இதுவரை பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. இவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் இதுவரை வந்ததில்லை.

ஆனால், இனி கதைகள் மாறும் என்ற காரணத்தினால் அதில் தன்னுடைய கேரக்டர் ரசிகர்கள் வேறுமாதிரியாக பார்க்க தொடங்கிவிடுவார்கள். அது பிடிக்காத காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஜெனிஃபர் அளித்துள்ள இவ்விளக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சீரியலை விட்டு விலகினாலும் ரசிகர்கள் என்றும் ஜெனிபருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வேறு ஒரு சீரியலில் ஜெனிபரை எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இதன் மூலம் பாக்யலட்சுமி தொடரின் கதைக்களம் மாறப்போகிறது என தெரிகிறது.