ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !!

Photo of author

By Divya

ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் .

 

மேலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 27 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாமன்னன் வெளியிடப்பட்டது.இந்நிலையில் ஓடிடியில் வெளியான நாளிலிருந்து அதிக பார்வையாளர்களை ஈர்த்த வகையில் ட்ரெண்டில் நம்பர்-01 ஆக உள்ளது.இதற்கு காரணம் பகத் பாசில் அவர்கள் ஏற்று நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம். தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்திய பகத் பாசில் அவர்கள் இப்படத்தில் ரத்தினவேலாகவே வாழ்ந்திருப்பார்.

இதனால் பகத் பாசில் அவர்களை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்,வீடியோ எடிட் செய்து கொண்டாடி வந்த நெட்டிசன்கள் தற்பொழுது ரத்தினவேல் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்த ரவீனா ரவியின்,ஜோதி கதாபாத்திரத்தையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

இப்படத்தில் ஜோதி கதாபாத்திரத்திற்கு வசனங்கள் அதிகம் இல்லையென்றாலும் முக பாவனையிலே ரவீனா தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.திரையுலகில் டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வரும் ரவீனா,தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.மேலும் ‘லவ் டுடே’ என்ற படத்தில் ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் ரவீனா ரவி சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.அது என்னவென்றால் மாமன்னன் படத்தில் தனக்கு அதிக வசனங்கள் இல்லையென்றாலும் தற்பொழுது தன் போர்ஷனை எடுத்து மீம்ஸ் மற்றும் வீடியோ எடிட் செய்து பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் தான் இந்த மீம்ஸ் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசித்தேன்.மேலும் தன்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு பெரிதாக கொண்டாடப்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை.இதற்கு முக்கிய காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பகத் பாசில் அவர்களுக்கும் தன்னை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்வதாக தெரிவித்துள்ளார்.