நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரத்தம் படம் உருவாகியுள்ளது. கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். தனது படங்களில் வித்தியாசத்தை விரும்பும் சி.எஸ்.அமுதன் டீசரையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் பிண்ணனி குரலில் ஒலிக்க ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.