ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் மத்திய அரசானது புதிய திட்டம் ஒன்றை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரேஷன் கார்டு மூலம் இனி மக்களுக்கு தேவையான இலவச மருத்துவ வசதிகளையும் பெற முடியும்.இவ்வாறு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இலவச மருத்துவ சேவையை பெற விரும்பும் மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு கட்டயாம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச மருத்துவ சேவை பெற விண்ணப்பித்தால் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டையின் மூலம் சாமானிய மக்கள் பல்வேறு நோய்களுக்கு இவசமாக சிகிச்சை பெற முடியும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மத்திய அரசானது நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.
ஆயுஷ்மான் அடையாள அட்டையை பெற விரும்பும் மக்கள் பொதுசேவை மையங்களுக்கு சென்று தனது அடையாள அட்டையை காண்பித்து விண்ணப்பித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.