தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

Photo of author

By Jayachandiran

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

கொரோனா பாதிப்பால் அரசு அறிவித்த 1000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் வழங்க முடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் 144 தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினை சரிசெய்யும் விதமாக தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1,000 ரூபாய் பணமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு மக்களுக்காக அறிவித்த 1,000 ரூபாய் பணம் மற்றும் இலவச உணவுப் பொருட்களை ரேசன் கடைகளில் தரமுடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் அதிரடியாக கூறியுள்ளார். இதனால் மக்களிடையே பரபரப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பால்ராஜ் கூறியதாவது;

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊழியர்கள் மக்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்களை வழங்கும்போது மற்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் பணத்தையும் உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்யலாம் என்று கூறினார். மேலும், இந்த விஷயத்தில் அரசு எங்களை வற்புறுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.