தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகமானது நடைபெறும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாமல் மேற்கொள்ளப்படும் சேவைகள் :-
✓ பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல்
✓ முகவரி மாற்றம்
✓ செல்போனின் மாற்றுதல் மற்றும் சேர்த்தல்
✓ நேரில் சென்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்களுக்கான அங்கீகார சான்று வழங்குதல் போன்றவை
மற்றும் பெயர்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பினும் இந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டில் உள்ள திருத்தங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆனது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டில் இருக்கக்கூடிய திருத்தங்களை மறக்காமல் இந்த குறை தீர்ப்பு முகாமை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.