ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

Photo of author

By Gayathri

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

Gayathri

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ரேஷன் அரிசியானது ஆப்பிரிக்கா நாட்டிற்கு கப்பல் வழியாக நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.

 

காக்கிநாடா துறைமுகத்தில் ஸ்டெல்லா எல் (Stella L) எனும் கப்பலில் ஏராளமான நியாயவிலைக் கடை அரிசி ஏற்றப்பட்டிருந்தது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அக்கப்பலை சோதனை நடத்தியுள்ளனர்.

 

இது குறித்த துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருப்பதாவது :-

 

காக்கிநாடா துறைமுகம் கடத்தல் மையமாக மாறியுள்ளது. இங்கிருந்து நியாயவிலைக் கடை அரிசி அதிகளவில் கடத்தப்படும் நிலையில், அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? இந்த கடத்தலை தடுப்பதில் அதிகாரிகளின் தோல்வி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

 

இதன்மூலம், எதிர்காலத்தில் சட்ட விரோதமாக வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கப்பலை பறிமுதல் செய்த இந்த கடத்தலின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதனை கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளார் பவன் கல்யாண் அவர்கள்.

 

மேலும் இது குறித்து, அமைச்சர் நாதெண்டல மனோகர் தெரிவித்திருப்பதாவது :-

 

அரிசி மூட்டைகள் கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்படுகிறது. துறைமுகத்தில் இருந்து கப்பலில் சரக்குகளை நேரடியாக ஏற்றுப்படுவதில்லை  எனவும் இது போன்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்துவோம். அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.