இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0
217

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தமிழ்நாட்டில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது தாக்கம் கட்டுக்குள் வந்தது.

தமிழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வரக்கூடாது என்பதற்காக தேர்வு அனைத்தையும் ரத்து செய்து உள்ளார்.அத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. பின் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள புகார் தெரிவிக்க http://www.tnpss.gov.in/ இந்த இணையதளத்தை அணுகலாம் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

இதன் மூலமாக விரைவில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஅடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!
Next article”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here