இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடப்படும்!

0
204
#image_title

இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடல்

கேரளா மாநிலத்தில் இன்று ரேசன் இ-பிஓஎஸ் சர்வர் செயலிழப்பு காரணமாக இயங்காததால் இன்று ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்காக முடியவில்லை. சர்வர்செயலிழப்பு சரிசெய்ய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என என்ஐசி கூறியதை அடுத்து இரண்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

அதே சமயம் இ-பிஓஎஸ் சர்வர் பிரச்னையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்தார்.மாநிலத்தில் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது மே மாதத்துக்கான ரேஷன் மே 6ம் தேதி முதல் தொடங்கும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சர்வர் பழுதால், அக்ஷய கேந்திரங்களில் நல ஓய்வூதியம் சேகரிப்பு மற்றும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது .இதனால் அங்கே ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டது.

Previous articleவிஷால் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் விஜய்! காரணம் என்ன?
Next articleபொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?