ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Photo of author

By Gayathri

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Gayathri

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும் 9388 பகுதி நேர ரேஷன் கடைகளும் 4352 முழு நேர ரேஷன் கடைகள் 1500 ரேஷன் அட்டைதாரர்களைக் கொண்டதாகவும் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தமாக 2 கோடி பேருக்கு மேல் கை ரேகை வைத்து ஒவ்வொரு மாதமும் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் இவற்றில் தற்பொழுது மிகப் பெரிய சிக்கலை ரேஷன் கடை ஊழியர்கள் சந்தித்து வருவதாகவும் அதை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பொழுது கைரேகை வைத்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கைரேகை வைப்பதில் இதுவரை 40 சதவீத கைரேகை பொருந்தி இருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 90% கைரேகை பொருந்தி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானபூர்வமாக பார்க்கும் பொழுது 20% கை ரேகை பொருந்து இருந்தாலே தவறுகள் ஏதும் நடக்காது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் 90 சதவிகித கை ரேகை என்ற நிபந்தனை ஏற்கத்தக்கது கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வருகிற பொழுது அங்கு இருக்கக்கூடிய கிடங்குகளில் உள்ள எடை தராசு கம்ப்யூட்டரும் ப்ளூடூத் மூலமாக இணைக்கப்படாமல் குறைந்த எடையில் பொருட்களை கொடுத்து விட்டு செல்வதாகவும் குறைந்த எடையில் இருக்கக்கூடிய பொருட்களை கொடுத்து மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எப்படி குறைவான பொருட்களை வைத்து மக்களுக்கு நிறைவாக கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியதோடு அதனோடு கூடவே 6 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் 24 வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.