கேரள மாநிலம்: இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடைமலைக்குடி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் சுமார் மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பஞ்சாயத்து இந்த இடைமலைக்தான்.
மேலும் இங்கு ஆறு மலை கிராமங்கள் 13 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு வாழ்கின்ற பழங்குடியினர் மக்களுக்காக கேரள அரசு சார்பில் மாதம் தோறும் 5,500 கிலோ ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக இந்த கிராமத்திற்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. இதைப்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
அதனை அதிகாரிகள் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அரசு அதிகாரிகள் நேரடியாக குடோனுக்கு சென்று அங்கிருந்து ஊழியர்களிடம் வழங்கள் துறை விசாரணை செய்தது.
அப்பொழுது அங்கிருந்த ஊழியர்கள் கூறிய பதில்தான் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அதாவது பழங்குடியின மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 5,500 கிலோ ரேஷன் அரிசியை எலிகள் தின்று விட்டதாக அங்கிருந்து ஊழியர்கள் கூறினர். இந்த பதிலை கேட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நிலை தடுமாற செய்தனர்.
மேலும் இதற்கிடையே ரேஷன் அரிசி மாயமான விவகாரத்தை விசாரணைக்கு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த ரேஷன் அரிசி திருட்டுத்தனமாக வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தது இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் வழங்கல் துறை யூகிக்கிறது.
இதுதொடர்பாக குடோன் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வழங்கல்துறையினர் தெரிவித்தனர். எலிகள் தின்று இருக்கலாம் என்றாலும் 5,500 கிலோ ரேஷன் அரிசியையும் தின்று இருப்பதாக எலிகள் மீது குற்றம் சுமத்துவது சரி இல்லை. உண்மையாக தின்றவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.